Sunday, October 31, 2010

திரை விமர்சனம் : எந்திரன் (The Robo)

எந்திரன் (The Robo)
சூப்பர் ஸ்டார், ஷங்கர், A. R. ரஹ்மான், ஐஸ்வர்யா பச்சன் படைப்பில் வெற்றிகரமாக கலக்கிக் கொண்டு இருக்கும் படம். டாக்டர் வசிகரன் பல வருஷம் கஷ்டப் பட்டு இந்திய ராணுவத்துக்கு உதவி செய்ய ஒரு ரோபோவ தயார் செய்கிறார்.
அந்த Humanoid ரோபோட், ரஜினி மாதிரியே ஸ்டைல், டான்ஸ், பைட் எல்லாம் செய்ய ஆரம்பிக்குது. சந்தானம், கருணாஸ் ரெண்டு பெரும் ரோபோவ கலாய்ச்சு அடி வாங்குறாங்க. ஐஸ்வர்யா நடுவுல வர ரோபோ அவங்களுக்கு உதவி செய்யுது.

ராகவ் மியூசிக் சத்தமா வெச்சு தொந்தரவு பண்ண, ஐஸ்வர்யா போய் தட்டி கேக்க, ராகவ் கிண்டல் பண்ண, ரோபோ மியூசிக் சிஸ்டத்த உடைச்சு சண்டை போடுது. அம்மன் கோவில்ல பாட்டு போடா அங்கயும் ரோபோ சண்டை போடுது.. (அது எப்படி எல்லா ஊர்லயும் ஹீரோயின் போயி தட்டி கேக்குறாங்க.. அது எப்படி அந்த எடத்துல எப்பவும் நீளமா முடி வெச்சா ரௌடிங்க இருக்காங்க.. இன்னும் எத்தன வருஷம் இதே பாக்குறது. சே!)

ப்ரியதர்ஷினிக்கு பிரசவம் பாத்து நல்லா பேர் வாம்கும் ரோபோட், ராணுவத்துக்கு தர ஒப்புதல் அளிக்கும்போது வசிகரனோட ப்ரோபாசர் அதை தடை செய்யறார். அதை சரி செய்ய வசிகரன் சிட்டிக்கு(ரோபோதான்) உணர்வுகளை உணர செய்யறாரு. ரோபோ ஐஸ்வர்யா ராய காதலிக்க, ராணுவத்துக்கு தரும்போது காதல் டயலாக் பேச வசிகரன் கோவம் வந்து பிரிச்சு குப்பைல போட்டுடராறு. ப்ரோபாசர் அத தேடி பிடிச்சு அழிக்குற சக்திய தந்துடராறு. அந்த நேரம் வசிகரன், ஐஸ்வர்யா திருமணம் நடக்க நடுவுல ரோபோ ஐஸ்வர்யா ராய கடத்திட்டு போய்டுது. தன்னை மாதிரியே பல ரோபோவ உருவாக்கிடுது. வசிகரன் ரோபோ மாதிரி மேக்கப் போட்டுட்டு போய் ஐஸ்வர்யாவ காப்பாத்த எல்லா ரோபோவும் சேர்ந்து சண்டை போடுது. கடைசீல வசிகரன் சிட்டிய சரி செய்யறாரு. கோர்ட்ல சிட்டிய dis-assemble செய்ய சொல்லிட சிட்டி தன்னைத்தானே பிரிச்சுக்குது. அவ்ளோதான்.

படத்துல ரஜினிக்கு அதிகம் வேலை இல்ல. ஆனா ரோபோவ வர்ற ரஜினி, ஐஸ்வர்யா ராய கடத்திட்டு போன அப்புறம் பண்றதெல்லாம் சூப்பர்.. அதுவும் "மேமேமேமே" டபுள் சூப்பர்.. ஐஸ்வர்யா பச்சன் "ராவணன்" படத்துல பார்த்து நொந்து போனவங்களுக்கு இந்த படம் ஒரு சாக்லேட்.

ஷங்கர் படத்துல வழக்கமா வர்ற பல விஷயம் இந்த படத்துலயும் ரிப்பீட். சந்தானம், கருணாஸ் ரெண்டு பெரும் அவ்வளவு பெரிய ப்ரொஜெக்ட்ல இருந்துட்டு பணத்துக்காக வில்லனுக்கு கட்சி மாறுவது கொஞ்சம் கூட நம்ப முடியல. கிராபிக்ஸ் நல்லா இருந்தாலும் கிளைமாக்ஸ் சண்டைல Transformer படம் ஞாபகம் வருது.

மறுபடியும் இப்போ "I-Robot" படம் பாத்தேன். மன்னிச்சுகோங்க! தமிழ் சினிமா இன்னும் தூரத்துலதான் இருக்கு. 6 வருஷத்துக்கு முன்னாடி வந்த படம், 2010 லேட்டஸ்ட் டெக்னாலஜி வெச்சுக்கிட்டு இப்போகூட அந்த அளவுக்கு பண்ண முடியல. :( இந்த படத்தோட கதை நிச்சயமா புதுசு இல்ல (0.000001% கூட) "The Terminator" படத்துல வர்ற அதே சென்டிமென்ட் சீன்.

மத்தபடி எந்திரன் நிச்சயம் சூப்பர் ஹிட் படம்தான்.. சிட்டி ரஜினிக்காக கண்டிப்பா மறுபடி பாக்கலாம்..

திரை விமர்சனம் : பாஸ் என்கிற பாஸ்கரன்

பாஸ் என்கிற பாஸ்கரன் (Boss (a) Baskaran)

பாட்டு எல்லாம் நல்லா இருந்துச்சு, படமும் நல்லா இருக்கும்னு பார்த்த படம்.
காமெடி மட்டும் போதும்னு இயக்குனர் ராஜேஷ் படம் எடுத்து இருக்கார். சரவணன், ஆர்யா அண்ணன் தம்பி.. சரவணன் கால்நடை மருத்துவர். ஆர்யா அரும்பாடு பட்டு பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கறவர்.. அரியர் எக்ஸாம் எழுத போகும்போது நயனதாராவ பாத்து சரண்டர் ஆகுறாரு ஆர்யா.

நயந்தாராவோட அக்காவுக்கும் சரவணனுக்கும் கல்யாணம் ஆக ஆர்யா குஷியா நயந்தாராவோட டூயட் பாடுறாரு. அண்ணிகிட்ட நயனதாராவ விரும்புறத சொல்ல அவங்க வேளைக்கு போக சொல்றாங்க. நயன்தாராவோட அப்பா வழக்கம்போல பிரச்சனை பண்றாரு. ஆர்யா, சந்தானனத்தோட சேர்ந்து டுடோரியல் காலேஜ் ஆரம்பிக்கிறாரு.

பல பிரச்சனைகளுக்கு அப்புறம் காலேஜ் நல்லா நடக்குது. ஆர்யாவோட அண்ணி அவங்க அப்பாகிட்ட நயனதாராவ பொண்ணு கேக்க அவரு மறுபடியும் பிரச்சனை பண்ண அப்புறம் சந்தானம்தான் காரணம்னு தெரிஞ்சு ஆர்யா விரட்ட நடுவுல ஜீவா மாப்பிளையா வர (கொஞ்சம் இருங்க.. மூச்சு வாங்குது.. சோடா ப்ளீஸ்..)

கடைசீல ஆர்யாவும் நயன்தாராவும் கல்யாணம் பண்ணிக்கறாங்க..
லாஜிக் இல்லாம பாத்தா நல்லா படம்.. ஜாலியா நேரம் போகும்..

பாடல்கள், காமெடி சூப்பர். அதுலயும் "நான் கடவுள்" படத்துல வில்லனா வர்றவர் பண்ற காமெடி.
"யாரிந்த பெண்தான்" பாடல் திரும்ப திரும்ப கேக்கலாம்..

பெரிய மைனஸ் - படம் "சிவா மனசுல சக்தி" பாகம் - 2.

Wednesday, May 12, 2010

திரை விமர்சனம் : கோரிப்பாளையம்


எங்க ஊருல எல்லாரும் வருஷா வருஷம் கொடுமுடி, பழனி போவோம். காலையில நேரமே பழனி மலை ஏறி சாமி கும்புடுவோம். அதுனால ஒரு நாள் முன்னாடியே பழனி போய் காவடி மடத்துல தங்குவோம். பொறுப்பு நிறைய இருக்கறவங்க எல்லாரும் காவடி வேலைய செய்ய, வெட்டி பசங்க எல்லாரும் படம் பாக்க ஓடிருவோம்.

அப்படி இந்த வாரம் தடவை பார்த்த படம் கோரிப்பாளையம். நான் பாக்கனும்னு நினைச்ச படம் "இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்". அந்த படம் எடுத்துட்டாங்கலாம். சரி என்ன படம் ஓடுதுன்னு பாக்கலாம்னு சுத்துனோம்.. சும்மா 25 பெரிய கட்-அவுட், பிளாஸ்டிக் ஹோர்டிங்-ல விஜய் அவரோட ரசிகர்களோட சிரிச்சுட்டு போஸ் குடுத்துட்டு இருந்தார். வேற என்ன? BlockBuster of the Year "சுறா" படத்துக்குதான் இந்த விளம்பரம். அதுல சுறா மீன் மேல விஜய் சவாரி செய்யற மாதிரி ஒன்னு. 'ஓடுங்கடா எல்லாரும்'-ன்னு தலை தெறிக்க ஓடுனோம். சினி வள்ளுவர்-ல "சுறா", வள்ளுவர்-ல "கோரிப்பாளையம்". கூட வந்த அதன பசங்களும் ரொம்ப நல்லவனுக.. 'சுறா படம் பாக்கறதுக்கு வேற எந்த படம் வேணாலும் பாக்கலாம்டா'-ன்னு சொல்ல, அதுக்கப்புறம் என்ன யோசனை? எல்லாரும் தியேட்டர்க்கு உள்ளே போய்ட்டோம். செகண்ட் ஷோ ரொம்ப கூட்டம் இல்ல.

கோரிப்பாளையம் "தூங்கா நகரம்" மதுரை பக்கத்துல ஒரு சின்ன கிராமம். அங்க இருக்க நாலு பேரோட வாழ்கை வரலாறுதான் படத்தோட கதையாம். ஹரிஷ், ராமகிருஷ்ணன் (குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் ஹீரோ), பிரகாஷ், ரகுவரன்(நம்ம ரகுவரன் இல்ல.. இது வேற) இவுங்ககூட சிங்கம் புலி. இவுங்க எல்லாருக்கும் உதவி செய்யறவர் 'காமெடி டைம்' மயில்சாமி. இந்த 4 பேரும் எல்லா நேரமும் கஞ்சா, தண்ணி மிச்ச நேரம் யார் தப்பு பண்றாங்களோ அவுங்கள அடிக்கறாங்க.. ஹரிஷ் அவங்க மாமா பொண்ண விரும்ப எல்லாரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க.. அப்புறம் அந்த பொண்ணு ஹரிஷோட நன்பரதான் காதலிச்சதா சொல்ல உடனே ஹரிஷ் தாலிய கழட்டிட்டு அவரோட நன்பர தாலி கட்ட சொல்றாரு. (எந்த ஊருலடா இருக்கீங்க?) அப்புறம் அவங்க ரெண்டு பேரும் வேற ஊருக்கு போய்டுறாங்க.

ராமகிருஷ்ணனுக்கு ஒரு பொண்ணு மேல காதல் வருது.. எப்படின்னு ரொம்ப புதுசா காட்டி இருக்காங்க. தினமும் காலையில நாயகி ஹட்ச்(Hutch) நாய்க்குட்டிய கூட்டிகிட்டு வாக்கிங் வருவாங்களாம்.. அந்த நாய் குட்டி கரக்டா ராம கிருஷ்ணன் மேலே போய் மூச்சா போகுமாம்.. அவரு கோவப்பட்டு சண்டை போட அப்புறம் ரெண்டு பேருக்கும் காதல் வருதாம். (வேற வழி இல்ல. நம்பித்தான் ஆகணும்)

அந்த ஊருல பெரிய ரௌடிங்க 2 பேர். ரவி மரியாவும் அவரோட தம்பியும்.. இவங்களுக்கு ஒரு தங்கச்சி.. இவுங்க அப்பா அலெக்ஸ். ராஜ்கபூர் ஒரு ரவுடி கும்பல் தலைவர். ஒரு பிரச்சனைல ராஜ்கபூர ஹரிஷ் க்ரூப் அடிச்சுர்றாங்க. ராஜ்கபூர் ரவி மரியாகிட்ட போய் ரவி மரியாவோட தங்கச்சியும் ஹரிஷும் காதலிக்கறதா சொல்லிடறாரு.. எதார்த்தமா இவுங்கள ரவி மரியா தியேட்டர்ல பாத்து தங்கச்சிய அடிச்சுடறாரு. ஆனா ஹரிஷுக்கு ரவி மரியாவோட தங்கச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். பண தேவைக்காக 4 பேரும் எதாவது வீட்டுல திருட முடிவு பண்ணி ஒரு வீட்டுக்குள்ள போய்டுறாங்க.. அப்புறம்தான் தெரியுது அது ரவி மரியா வீடுன்னு(அடடா!). பாதில ரவி மரியா தங்கச்சி, ஹரிஷை பாத்து கத்த எல்லாரும் ஓடி வர்றாங்க.. ரவி மரியா ஹரிஷை பாத்துடராறு.. உடனே கோவ பட்டு தங்கச்சிய கொன்னுடரராம் (ஆண்டவா). இதை வீட்டுக்குள்ள ஒளிச்சிட்டு இருந்த ராம கிருஷ்ணன் பாத்துட்டு ஹரிஷ்கிட்ட சொல்லிடறாரு.

அலெக்ஸ் இந்த 4 பேரையும் திடீர்னு பாத்து அடிக்க போக, ராம கிருஷ்ணன் தள்ளி விட கல்லுல தலை மோதி இறந்துடராறு. இதை ஆடு மேய்க்கிற ஒருத்தர் பாத்துட்டு போய் ரவி மரியாகிட்ட சொல்லிடறாரு.. ராஜ் கபூர் ரவி மரியாகிட்ட இந்த 4 பேரையும் கொல்ல விக்ராந்த்த கூட்டி வர்றாரு..

4 பேரும் தலை மறைவா சுத்துறாங்க.. சிங்கம் புலி இவுங்கள தேடி வந்து ராம கிருஷ்ணனோட காதலி கர்ப்பமா இருக்கறத சொல்லுறாரு. ஒரு மொக்கை பிளாஷ் பேக். (இந்த காலத்துல பொண்ணுங்க பேசவே யோசிக்கும் பொது வேலை இல்லாம சுத்துறவனை, படிச்ச பொண்ணு வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போடுறது அப்புறம் வரம்பு மீறுவதெல்லாம் ரொம்ப ஓவர்)

ராமகிருஷ்ணனுக்கு பொண்ணு கேக்க எல்லாரும் பொண்ணு வீட்டுக்கு போக அங்க அவங்க அப்பா அவமானப்படுத்தி அனுப்பிடறாங்க. அப்புறம் இவங்களுக்கு ஹரிஷ் கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணுறாரு. அப்புறம் சண்டை. விக்ராந்த் ராமகிருஷ்ணனை கொன்னுடறாரு.

ஹரிஷ் க்ரூப் கோவம் வந்து ரவி மரியாவை கொன்னுடறாங்க.. ராஜ்கபூர் எஸ்கேப் ஆயிடறாரு.. இதுக்குள்ள ராம கிருஷ்ணனோட அம்மா மஞ்சள் காமாலை வந்து இறந்துடறாங்க.. மயில்சாமி இதை சொல்ல விக்ராந்த் அங்கே வந்துடறாரு (செம ட்விஸ்ட்). "அண்ணே எங்க அம்மா இறந்துட்டாங்களாம் .. இப்பதான் சொன்னாங்க. 2 நிமிஷம் அழுதுக்கறேன்"-ன்னு விக்ராந்த்-கிட்ட கெஞ்ச விக்ராந்தும் பெரிய மனசோட(!!) விட்டுடறார்.. அப்புறம் அழுது முடிச்சதும் கொன்னுடறாரு.. வர்ற வழில அவரோட தம்பி விபத்துல அடி பட்டு உயிர் விடுறாரு.. விக்ராந்த் மனம் திருந்துறாராம் (ஐயோ ராமா).. ராமகிருஷ்ணனுக்கு இறுதி சடங்கு நடத்த படம் முடிஞ்சது..

சுப்ரமணியபுரம் படத்தோட வெற்றிய நம்பி அதே பார்முலாவை பயன்படுத்தி தோற்று இருக்காங்க. சுப்ரமணியபுரம் படத்துல இருந்த யதார்த்தம், நுணுக்கம் இந்த படத்துல்ல கொஞ்சம் கூட இல்ல.

மாயாண்டி குடும்பத்தார் படத்துல வந்த அதே நட்சத்திர கும்பல். ஆனாலும் சொல்லிக்கற அளவுக்கு இல்ல. சிங்கம் புலி-யோட காமெடி சில இடத்துல ஓகே. லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு ஆப்பம் விக்கிறவங்களை இந்த மாதிரி படத்துலதான் பாக்க முடியுது (கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்களோ!). அதுகூட எதோ ஒரு பாட்டுக்கு மட்டும்னா பரவால்ல, படம் பூரா அடிக்கடி வர்றது எரிச்சலாதான் இருக்கு. தேவையே இல்லாத இரட்டை அர்த்த வசனங்கள்.

மதுரை ரொம்ப பச்சை பசேல்-ன்னு காட்டி இருக்காங்க.. இருந்தாலும் நாயகிகள் பாடல் காட்சிகள்ல மொக்கை மேக்-அப் வர்றாங்க. (எங்க ஊருல நாடகம் போட்டா அதுல நடிக்கறவங்க இந்த மாதிரிதான் இருப்பாங்க) எப்படி இதை எடிட்டிங்-ல விட்டாங்க?! இளவரசு ராமகிருஷ்ணன் சின்ன வயசா இருக்கும்போது சிகரட் பத்த விக்க சொல்றது, அவர் முன்னாடியே சாராயம் குடிக்கறதுன்னு இருக்காரு.. பின்னால திடீர்னு திருந்திடறாராம்.. ரவி மரியா ரொம்ப ஓவர் அக்டிங். அலெக்ஸ், விக்ராந்த் பாவம் (புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்க சார்).

ஹரிஷ், ராமகிருஷ்ணன் நடிப்பு பரவால்ல. "என்ன இந்த மாற்றமோ", "அழகு காட்டேரி" ரெண்டு பாடலும் நல்லா இருக்கு.. "ஊஞ்சலாடி ஒய்ந்து போன" பாட்ட கேக்கும்போது கண்ணுல கண்ணீர் வந்துரும் (நிஜமாதான்).. ஆரீராரோ கேட்டதில்லை பாடலும் ஓகே.

மொத்தத்தில் கோரிப்பாளையம் : சுப்ரமணியபுரம் காப்பி

Thursday, May 6, 2010

ராவணன் பாடல்கள் விமர்சனம்


இசை : A R ரஹ்மான்
பாடல்கள் : வைரமுத்து
இயக்கம் : மணி ரத்னம்

1. காட்டு சிறுக்கி
Shankar Mahadevan, Anuradha Sriram
அனுராதா ஸ்ரீராம் குரலில் பாடல் சூப்பர்..

2. வீரா வீரா
Vijay Prakash, Keerthi Sagathia
ரொம்ப சூப்பர்-நு சொல்ல முடியாது.. ஆனா கேக்கலாம்..

3. கள்வரே கள்வரே
Shreya Goshal
ஸ்ரேயா கோஷல் குரலில் ஒரு மெல்லிசை சோக பாடல்.. கேக்க நல்லா இருக்கு..


4. கெடாக்கறி
Benny Dayal, Bhagyaraj, Rayhanah, Tani Shah
கோரஸ் பாடல். சுமார்..

5. கோடு போட்டா
Benny Dayal
கருத்து பாடல்.. பரவால்ல..

6. உசுரே போகுதே
Karthik
கார்த்திக் குரலில் இந்த பாடல் இதுக்கு முன்னாடி கேட்ட மாதிரியே இருக்கு.. (எதோ ஒரு பாட்டோட காப்பி மாதிரி இருக்கு)

மொத்தத்தில் ராவணன் பாடல்கள் குரு பாடல்கள் மாதிரி சுமார்தான். விண்ணை தாண்டி வருவாயா அளவுக்கு இல்ல..

பாடல்கள் டவுன் லோட் செய்ய http://www.desinapster.com/showthread.php?goto=newpost&t=4919

Sunday, May 2, 2010

திரை விமர்சனம் : அங்காடி தெரு


இந்த வாரம் பாத்த படம் வசந்த பாலனின் அங்காடி தெரு. யதார்த்தமான செண்டிமெண்ட் படம்.. ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி அப்படின்னு சொல்ல முடியல.. ஆனா முக்கால்வாசி படம் நிஜ வாழ்வில் நடப்பதே.. சரி கதைக்கு வருவோம்..

படம் பிளாஷ்பாக்-ல ஆரம்பிக்குது.. ஹீரோ மகேஷ் கிராமத்துல +2 பரீட்சை எழுதிட்டு கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கார்.. அவரோட அப்பா வேலைக்கு போயிட்டு 'டெம்போ'ல வரும்போது டிரெயின் மோதி இறந்துடறார்.. அம்மா, 2 தங்கச்சி இவங்களுக்காக வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை.. அப்போ நெல்லை-ல முருகன் ஸ்டோர்ஸ்-ல வேலைக்கு ஆள் எடுக்கறாங்க.. மகேஷ்சும் அவரோட நண்பர் மாரிமுத்துவும் வேலைக்கு சேர்ந்து சென்னை போறாங்க..

அங்க அஞ்சலி குரூப். மோதல் அப்புறம் காதல்..(என்னா ரைமிங்!!) அந்த கடைல இவங்களுக்கு சூப்பர்வைசர் A. வெங்கடேஷ் (இவருதான் வில்லன்).. சௌந்திர பாண்டி செல்வ ராணிக்கு காதல் கடிதம் எழுதி ரெண்டு பேரும் மாட்டிக்கிறாங்க.. வெங்கடேஷ் அடிக்க சௌந்திர பாண்டி, "நான் இவள காதலிக்கவே இல்ல"-நு சொல்லி திட்டிடறாரு.. உடனே செல்வராணி பில்டிங்-ல இருந்து கீழ குதிச்சு இறந்துடறாங்க.. இங்கதான் இடை வேளை..

கடை முதலாளி அண்ணாச்சி எல்லாரையும் திட்டி அதிகாரிங்களை பணம் கொடுத்து சரி கட்டிடராரு.. மகேஷ் அஞ்சலிய விட்டு விலக பார்க்க, மாரிமுத்து (மகேஷ் நண்பர்) அஞ்சலிகிட்ட சொல்லிடறார்.. அப்புறம் மகேஷ் மன்னிப்பு கேக்கறாரு.. அஞ்சலியோட தங்கச்சிக்கு மகேஷ் சுடிதார் வாங்கி தரார்(விசேஷம்தான்).. அஞ்சலியும் மகேஷும் வெங்கடேஷ்-கிட்ட மாட்டிகிறாங்க.. அப்புறம் போலீஸ்-கிட்ட மாட்டி அடி வாங்கி வெளிய வர்றாங்க.. வேலை தேடி அலைஞ்சு கடைசீல ஒரு பெரியவர்கிட்ட பொருள் எல்லாம் வாங்கி விக்கறாங்க..

ரோட்டோரமா தூங்கும்போது ஒரு லாரி வந்து மோதிடுது.. அதுல அஞ்சலியோட ரெண்டும் காலும் அடிபட்டுடுது.. அவர பாக்க வர்ற அஞ்சலியோட அப்பா சொல்லாமலே கிளம்பிடுராறு.. மகேஷ் அஞ்சலிய கல்யாணம் பண்ணி ரெண்டு பேரும் சேர்ந்து பொருள் விக்கறாங்க..

இது ரொம்ப புதுசான கதை-ன்னு சொல்ல முடியாது. ஆனா பெரிய ஸ்டோர்ஸ்-ல என்ன நடக்குதுன்னு இதுவரைக்கும் பாக்காதத/தெரியாதத சொல்லி இருக்காங்க. மாரிமுத்து, அண்ணாச்சி கேரக்டர் ஓகே (யதார்த்தம்!?@). செல்வராணி காதலரா வர்ற சௌந்திர பாண்டி கடைசீல அவர நினைச்சு புலம்பறது நம்மள கண் கலங்க வைக்குது. டைரக்டர் வசந்த பாலன் இதுதான் சான்ஸ்-நு வெங்கடேஷை நல்லா பழி வாங்கிட்டார்.

படத்துல இடையில சின்ன சின்ன நிஜ சம்பவங்கள கோர்த்து இருக்காங்க. அஞ்சலி, வெங்கடேஷ் தவிர மத்தவங்க எல்லாம் புதுசு. + விஜய் ஆன்டனி மியூசிக் படத்துக்கு பெரிய பலம்.. பாட்டு எல்லாம் சூப்பர்.. (கதைகளை பேசும் விழி அருகே, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை இரண்டும் என்னோட பேவரிட்)

அவ்வளவு பெரிய கடைல எல்லார் முன்னாடியும் வெங்கடேஷ் வேலை செய்யறவங்கள திட்றதும் அடிக்கறதும் கொஞ்சம்(ரொம்பவே) ஓவரா தெரியுது.. (நான் அப்படி எங்கயும் பாத்தது இல்ல. அதான்)

மொத்ததுல அங்காடி தெரு ரொம்ப நல்ல படம்தான்.. ஆனா ரேனிகுண்டா, சுப்ரமணியபுரம், கற்றது தமிழ், பருத்தி வீரன் அளவுக்கு இல்ல..

Friday, April 30, 2010

திரை விமர்சனம் : பையா


வழக்கம் போல தாராபுரம் சத்யா தியேட்டர்.. படம் : பையா.. அளவான கூட்டம்..
YSR பாட்டு எல்லாம் நல்லா இருந்துச்சு.. படமும் நல்லா இருக்கும்னு தான் நானும் டைரக்டர் தம்பியும் போனோம்.. இப்போல்லாம் தியேட்டர்ல ரீல் இல்ல.. எல்லாம் சாட்டிலைட் தானாம்.. என்னமோ போங்க.. மொக்கை படத்த எதுல பாத்தா என்ன?

டைட்டில் எல்லாம் சூப்பர்-ஆ இருந்துச்சு.. transporter காப்பி.. 4 சாப்ட்வேர் இஞ்சினியர்.. ஒரு பொண்ணு.. பெங்களூர்-ல டிராம் பஸ்ல போறாங்களாம்.. (நானும் 4 வருஷமா பெங்களூர்-ல இருக்கேன்.. அப்படி ஒரு பஸ் கூட பாத்தது இல்ல..) சரி விடுங்க.. போனா போகுது.. அந்த பொண்ணு "அவன் நிக்குற பஸ்ல ஏற மாட்டானாம்.".. "அவன்"? வேற யாரு.. நம்ம ஹீரோ கார்த்திக் தான்.. ஓடி வந்து பஸ்-ல ஏறுறாரு.. தமன்னா அதே பஸ்ல இருந்து இறங்குறாங்க.. பாத்ததும் அழகுல மயங்கிடுறாரு.. (கடவுளே)

கார்த்திக்கும் பிரண்ட்சும் டிரஸ் வாங்க போறாங்க.. அங்க லிப்ட்-ல தமன்னா... அடுத்த நாலா இன்டர்வியுக்கு போறாரு.. அங்க மறுபடியும் தமன்னா.. (டேய்!!) வேற என்ன இன்டர்வியு காலி.. வழக்கம் போல ஒரு பாட்டு.. (உஷ் ஓவரா கண்ண கட்டுதே)

கார்த்திக் பிரண்ட் டாக்ஸி ஏஜன்சி நடத்துறவர கூட்டிட்டு வர ரயில்வே ஸ்டேஷன் போறார் கார்த்திக்.. அங்க தமன்னா சென்னை போகுற டிரெயின் டிக்கெட்ட தொலைச்சுட்டு வில்லன்-கூட சுத்துறாங்க.. கார்த்திக்-கிட்ட வந்து சென்னை போக கூப்பிடுறாங்க.. கார்த்திக் வேண்டாம்னா சொல்லுவாரு.. கிளம்புறாங்க.. பாதில வில்லன்-ந விட்டுட்டு தமண்ணா கிளம்ப சொல்ல கார்த்திக் சந்தோசமா கிளம்புறாரு.. தமன்னா மும்பை கூட்டிட்டு போக சொல்லறாங்க.. வழி-ல யாருக்கோ ரிப்பேர் ஆன வண்டிய சரி பண்ணி தர்றாரு.. குழந்தைகளுக்கு ஐஸ் வாங்கி தர்றாரு.. (அட ஆமாங்க..) தமண்ணா உடனே அவங்க கதைய சொல்றாங்க..

அதாவது தமண்ணா அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு தமன்னாவ வில்லனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ண தமன்னா அதுல இருந்து தப்பிச்சு மும்பை-ல பாட்டி வீட்டுக்கு போறாங்க.. வழில தமன்னா அப்பா ஆளுங்க குறுக்க வர கார்த்திக் அடி பின்றாரு.. (அதிகமில்ல ஜென்டில்மென். ஜஸ்ட் 25 பேருதான்!!)

கார்ல போகும்போது மழை வருது.. வேற வழி இல்லாம இன்னொரு பாட்டு.. (சூப்பர் ஏரியா, சூப்பர் கேமரா.)

இதுல இன்னொரு க்ரூப் வேற.. கார்த்திக்கோட பிளாஷ் பேக்.. (மும்பைல வில்லன அடிச்சுட்டு பெங்களூர் வந்துறாரு..) மறுபடி சண்டை.. (ஆவ்வ்) 25 பேரையும் கார்த்திக் மிச்சம் வைய்க்காம அடிக்கறாரு..(சபாஷ்)

நைட்டு ஆயுடுது.. தமன்னாவ தேடி வந்த வில்லனுங்க தொரத்துறாங்க.. காட்டுக்குள்ள 10 அடி தூரத்துல வில்லனோட ஆளுங்க தேடி பாத்துட்டு திரும்பி போய்டுறாங்க..(உலக அதிசயம்).. கார்த்திக் பாட்டு பாடுறாரு.. (அந்த மாதிரி செட்டு உலகத்துல எங்கயும் பாக்க முடியாது..)

கடைசீல மும்பை போய் சேர்ந்துறாங்க.. அங்க தமன்னா பாட்டி வீட்டுல தமன்னா திட்டி அனுப்பிர்றாங்க.. இதுக்குள்ள கார்த்திக் ரொம்ப பீல் பண்ணி ஊருக்கு கிளம்புறாரு.. போற வழில தமன்னா நிக்கறாங்க.. கதைய சொல்றாங்க..

கிளைமாக்ஸ்ல ரெண்டு வில்லன் குரூப்பும் சேர்ந்துக்கறாங்க.. மிலிந்த் சோமன் இரும்பு கம்பில அடி பின்னிடுராறு.. அதுக்கு அப்புறம் கார்த்திக் எல்லாரையும் அடிச்சு தள்றாரு. (காதுல பூ வாசம் ஓவரா மனக்குதுங்க.. கொஞ்சமாவது லாஜிக் வேணாம்).

"இனிமே யாராவது குறுக்க வந்தீங்கன்னா தொலைச்சுருவன்"-னு ஒரு உலக மகா டயலாக்க சொல்லிட்டு கிளம்புறாரு.. வழில பெங்களூர் நண்பர் குரூப் அவர தேடி மும்பை வர்றாங்க.. அவங்க கார்த்திக் அடிச்ச லூட்டி பத்தி சொல்ல தமன்னா கார்த்திக் லவ் பண்றத தெரிஞ்சுக்கறாங்க.. (அப்புறம்.. அப்புறம்.. அட போங்க.. நான் வீட்டுக்கு போக வேணாம்?)

லிங்கு சாமியோட தீபாவளி படத்துக்கும் இதுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்ல..
எனக்கு பிடிச்சது டைட்டில்-உம், பாடல்களும் (ஒன்லி ஆடியோ)..


மொத்தத்தில் : பையா - கார்த்திக் காலி..

Tuesday, January 20, 2009

திரை விமர்சனம் : வில்லு

Villu எங்க ஊர்ல இருக்கறதே 3 தியேட்டர்.. பொங்கலுக்கு எந்த படத்துக்கு போலாம்னு கொஞ்சம் கண்பியுசன்.. வில்லு, படிக்காதவன்-ல, "வில்லு" போய் பாக்கலாம்னு கிளம்பிட்டோம்.. பாட்டெல்லாம் நல்லா இருக்கே, பிரபுதேவா கொஞ்சம் நல்லா பண்ணுவார்னு நம்பி போனோம்.. டைட்டில் முழுக்க MGR பாட்டை வெச்சி முடிச்சிட்டாங்க..

தாமு முதல் சீன்ல வந்து பாட்டிகிட்ட பேட்டி எடுக்கிறார்.. (ஹீரோ Intro) தமிழ் சினிமா விதிப்படி விஜய் வந்து 4 வில்லன்களிடமிருந்து ஒரு பொண்ணை காப்பாத்துறார் (இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சார் இந்த சீன் வைப்பீங்க?).. "ஸ்பைடர் மேனா? சூப்பர் மேனா? போக்கிரி மேன்.." (டயலாக்)வழக்கம் போல பாட்டு.. குஸ்பூ மாஸ்டர்!? வேற வந்து ஸ்க்ரீன் பூரா அடுறாங்கன்னா..

அப்புறம் போலீஸ் டாப் சீக்ரட் கேஸ் ஓபன் ஆகுது.. இன்டர்நேஷனல் வில்லன் தமிழ்நாட்டு கப்பல்ல வர்றார்..போலீஸ் அவரை ரவுண்ட் அப் பண்ணுறாங்க.. விஜய் போலீஸ்கிட்ட இருந்து அவர காப்பாத்தி கடலுக்குள்ள கூட்டிட்டு போறார்.. அப்புறம் தன்னோட நண்பர்கிட்ட (போலீஸ்) அவரை ஒப்படைக்கிறார்.. விஜய் லேப்டாப்-ல எதோ மெயில் படிக்கிறார்.. அப்புறம் ஒரு கிராமத்துக்கு கல்யாணத்துக்கு கிளம்புறார்.

வடிவேல் என்ட்ரி(அப்பாடா.. வந்துட்டான்யா.. வந்துட்டான்) கொஞ்ச நேரம் காமெடி.. அப்புறம் நயன்தாரா விஜய் கூட மோதல் அப்புறம் காதல்-ன்னு விழறாங்க (ஆவ்வ்..) வழக்கம் போல ஒரு டூயட்.. ரெண்டு பெரும் நயன்தாரா அப்பா பிரகாஷ் ராஜ்-கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க முனிச் (ஜெர்மனி) போறாங்க.. அங்க பிரகாஷ் ராஜ் அவரோட நண்பர்(தேவராஜ்)-கூட (ராக்கா) மாட்டிகிட்டதுக்கு சண்டை போடுறார், அப்புறம் சேர்ந்துக்கறார்.. விஜய் பிரகாஷ் ராஜ்-கிட்ட ராக்கா-வை நான்தான் கொன்னேன்-ன்னு சொல்றார் (போலீஸ்-கிட்ட ராக்காவோட பாடியே கிடைக்காம எப்படித்தான் ராக்கா செத்துட்டார்ன்னு எல்லாரும் நம்புறாங்க-ன்னு தெரியல).. விஜய், ரவுடி-ங்கள (ஸ்ரீமன், ஆனந்த ராஜ்) அடிக்கறார்.. தேவராஜ், விஜயை சுட்டு கொல்ல கிளம்புறார். அங்க அவரோட மனைவிய(விஜயோட அம்மா) பாக்குறார்.. அப்புறம் எல்லாரும் சேர்ந்துக்கறாங்க..

விஜயோட அப்பா அவரை ஒரு தீவுக்கு கூட்டி போய் ஒரு blue ray disk-a தர்றார்.. அதுல பிரகாஷ் ராஜோட எல்லா விஷயமும் இருக்காம்.. அதே மாதிரி இவரை பத்தின ஒரு டிஸ்க் தேவராஜ் கிட்ட இருக்கு..Villu

தீவுல இருந்து வரும்போது தேவராஜ் பெரிய பாறை-ல மோதி மண்டைய போடுறார்.. அதுக்குள்ளே விஜய் அப்பாவ விட்டுட்டு பாராசூட்டோட கடல்ல குதிச்சு தப்பிக்கிறார்.. அதே நேரம் நயன்தாரா அங்க படகுல வர்றாங்க.. (அவ்ளோ பெரிய அக்சிடன்ட், அவ்வளவு பக்கத்துல இருந்தும் நயன்தாராவுக்கு எப்படி தெரியாம போச்சுன்னு யார போய் கேக்குறது?)

அந்த blue ray டிஸ்க்-எ பிரகாஷ் ராஜ்கிட்ட தர்றார் விஜய்.. அப்புறம் நயந்தாரவ கல்யாணம் பண்ணி தர சொல்றார்.. இதை பார்த்த நயன்தாரா, ஓடி போய் விஜய் அம்மாகிட்ட இவரை பத்தி சொல்ல அந்த அம்மா ஆரம்பிக்குது பாருங்க ஒரு பிளாஸ்பேக் தமிழ் திரை உலக வரலாறுல அப்படி ஒன்ன யாரும் பாத்து இருக்க முடியாது..

விஜயோட உண்மையான அப்பா மேஜர் சரவணன் (வேற யாரு விஜய்தான்) ஒரு நேர்மையான ஆர்மி ஆபீசர். (என்னால சிரிப்ப அடக்கவே முடியலீங்கன்னா - அவர பாத்தா சிரிப்பு போலீஸ் மாதிரியே இருக்கு..) அவரோட மனைவி ரஞ்சிதா, மகன் விஜய். ஒரு ஆப்ரேசன்ல பெருசா?! சண்டை போட்டு ஒரு கூட்டத்த காப்பத்துறார் (எத்தன தடவைதான் இதவே பாக்குறது)..

விஜய் தலைமைல ஆயுதம்-லாம் ஒரு வண்டில கொண்டு போறாங்க.. வழில பிரகாஷ் ராஜ், சம்பத், மலைகோட்டை வில்லன் மூணு பேரும் விஜய் அடிச்சிட்டு ஆயுதத்த கடத்துறாங்க. விஜய்-எ கொலை பண்ணுறாங்க.. போலீஸ்-கிட்ட விஜய்தான் ஆயுதம் கடத்துனதா சொல்லிடறாங்க.. விஜய் மேல தேச துரோகி குற்றம் சாத்துறாங்க.. ரஞ்சிதாவ கொடுமை படுத்துறாங்க.. ரஞ்சிதா விஜய்-எ இந்த பிளாஷ்பேக் சொல்ற அம்மாகிட்ட கொடுத்து வளர்த்த சொல்றாங்க.. கடைசீல மகன் விஜய் பிரகாஷ் ராஜ் தவிர மத்த இரண்டு பேரையும் கொன்னுட்டு பிரகாஷ் ராஜ ரஞ்சிதாகிட்ட கூட்டிட்டு வர்றார்.. நடுவுல முதல் சீன்ல கடத்துன வில்லன் போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சு வர்றார்.. விஜய் அவரையும் கொன்னுடறார்..

அப்புறம் பிரகாஷ் ராஜ அடிச்சு ஊர் மக்கள் முன்னாடி உண்மைய சொல்ல வைக்கிறார்.. கடைசீல அவரையும் கொன்னுடறார்.. அவ்ளோதானாம் படம் முடிஞ்சிருச்சாம்.. நயன்தாரா என்ன ஆனாங்கன்னே தெரியலைங்கன்னா (ரொம்ப முக்கியம்!!)

படம் ரொம்ப சுமார்.. வடிவேலு கொஞ்சம் நேரம்தான் வர்றார்.. காமெடி ஒன்னும் பெருசா இல்ல.. கிராமத்துல மைக் செட்டு கட்டுரவர் எப்படி ஜெர்மனி வர்றார்-ன்னு பிரபு தேவா-கிட்ட யாராவது கேட்டு சொல்லுங்க..

பாடல்கள் எல்லாம் சூப்பர்.. நடனம் பாக்கலாம் (நயன்தாராவையும்).. படம் போக்கிரி, கில்லி அளவுக்கு இல்லைனாலும் குருவி, அழகிய தமிழ் மகனுக்கு பரவால்ல..

பிரபு தேவா கொஞ்சம் உஷாராகனும்.. போக்கிரி சாயல் நிறைய இடத்துல தெரியுது.. பிரகாஷ் ராஜ், ஆனந்த ராஜ், வடிவேல் இவங்களை எல்லாம் இன்னும் கொஞ்சம் நல்லா பயன்படுத்தி இருக்கலாம்..

மொத்தத்தில் வில்லு
- ஒரு தடவை பார்க்கலாம்..

அடுத்த பதிப்பில் சந்திப்போம்..


Wednesday, January 14, 2009

படித்ததில் பிடித்தது

எங்கோ எப்போதோ படித்தது..

அழகானவை எல்லாம்
உன்னை ஞாபகப்படுத்துகின்றன..
உன்னை ஞாபகப்படுத்தும் எல்லாமே
அழகாகவே இருக்கின்றன..

----------------------------------------------------
நட்பு, காதல் மற்றும்
இன்ன பிற உறவுகளுக்குள்
வரையறுக்க முடியாத - ஆனால்
என் வானளாவிய அன்புக்குச் சொந்தக்காரி!
----------------------------------------------------
நேரில் கோபித்துக்கொண்டு
கனவில் வந்து கொஞ்சும்
மக்கு நீ!

----------------------------------------------------
எத்தனையோ அழகான‌
பெண்களைப் பார்த்தும்
தடுமாறாத எனக்கு...
உன்னைப்
பார்த்ததும் என்
தடுமாற்றங்களும்
அழகாக இருக்கின்றன..
என்னடி செய்தாய் என்னை ?
----------------------------------------------------
என் வீட்டு வாசலில் அஞ்சல் பெட்டி..
புதிதாக ஏதும் அஞ்சல் வந்திருகின்றதா
என்று எட்டி பார்த்தேன்..
அசைவற்று கிடந்தது ஒரு சிறிய இறகு..
எந்தப் பறவை எழுதிச் சென்று இருக்கும்?
----------------------------------------------------
விளையாட ஆள் இல்லை..
சோகத்தில் பொம்மைகள்..
பள்ளியில் குழந்தை..
----------------------------------------------------
கோடை விடுமுறை..
மகிழ்ச்சியில் குழந்தைகள்..
கவலையில் பள்ளி காக்கைகள்..

Monday, January 12, 2009

கொஞ்சம் கிறுக்கல்

நான் உன்னை..
நினைத்து பார்க்கவும் நினைக்கவில்லை..
மறக்கவும் நினைக்கவில்லை..
இருப்பினும் தினம் பார்க்கும் எதோ ஒன்று
உன்னை நினைவூட்டி சென்று விடுகிறது..
அனுதினம் கரையை வருடி செல்லும்,
அலையை போல..
-------------------------------------------
கண்ணிமைக்கும் நொடியில்,
கடந்து செல்லும் அவளது
கயல்விழி கவனத்தை களவாடி செல்கிறது..
மலரில் இருந்து மதுரம் குடித்து செல்லும்
சிறிய வண்ணத்துப்பூச்சியை போல..
-------------------------------------------
பாடலில் இரு வரி திருடி விட்டதற்காக
இங்கே வழக்காடுகிறார்கள்..
என் கவிதை உணர்வையே..
களவாடி காற்றோடு கலந்து விட்டாள் அவள்..
எங்கு சென்று வழக்கு பதிவு செய்வது?

-------------------------------------------
காதலில் விழுந்தால் கவிதை வருமாம்..
காதலில் தோற்றால் தத்துவம்/ஞானம் வருமாம்..
நான் விழவும் இல்லை.. தோற்கவும் இல்லை..
எனக்கேன் வருகிறது??
எல்லா கேள்விக்கும், விடை இருந்தே ஆக வேண்டுமா என்ன?
(கொஞ்சம் மொக்கை-யா ட்ரை பண்ணா இப்படித்தான் சார் வருது.. :-) )

Friday, January 9, 2009

திரை விமர்சனம் : சசியின் "பூ"

கடந்த வாரம் சசியின் "பூ" படம் பார்த்தேன்..
அடுத்த நாள் ஆபீஸ் போகணும், இருந்தாலும் பரவால்ல படம் பாத்துடுவோம்னு எங்க சீனியர்ஸ்கூட பாத்தேன்..

படம் நாயகி (பார்வதி) பிளாஷ் பேக் சொல்லுற மாதிரி ஆரம்பிக்குது.. கதைப்படி நாயகி (பார்வதி) அவங்க மாமவ (ஸ்ரீகாந்த்) சின்ன வயசுல இருந்து எக்கச்சக்கமா லவ் பண்ணுது.. ஸ்ரீகாந்த் இன்ஜினியரிங் படிக்கிறார்.. பார்வதி பட்டாசு பாக்டரில வேலை செய்யுது.. ஸ்ரீகாந்த் படிச்சு முடிச்சிட்டு ஊருக்கு வர்றார்.

ஸ்ரீகாந்தோட கிளாஸ்மேட், பார்வதி காதலிக்கரத ஸ்ரீகாந்த் கிட்ட சொல்லிடுது.. நடுவுல ஸ்ரீகாந்த் அவரோட நண்பர் வீட்டுக்கு போறார். அங்க அவரோட குழந்தைய பாக்குறார்.. மாமா பொண்ண கல்யாணம் பண்ணதால அந்த குழந்தை மனநிலை சரியில்லாம இருக்கு.. (ட்விஸ்ட்)
பார்வதிய கல்யாணம் பண்ணா இந்த மாதிரி ஆயிடுமோன்னு பயப்படறார்..

அவங்க அப்பா அவர தன்னோட முதலாளி பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்றார் (பணம் சார் பணம்). ஸ்ரீகாந்த் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிடறார்.. ஸ்ரீகாந்தோட அப்பா, மகன் தன்னை திட்டிட்டானே.. கனவெல்லாம் வீணாயிடுச்சேன்னு சரக்கு அடிச்சிட்டு தண்ணில விழறார்.. அப்புறம் அவர வீட்டுக்கு கூட்டி வந்து மருத்துவம் பாக்குறாங்க.. ஸ்ரீகாந்த் வேற வழி இல்லாம (தெரியல) அந்த முதலாளி பொன்னையே கல்யாணம் பண்ணிக்கறார்.

பார்வதியோட அண்ணன் பார்வதிக்கு ஒரு மளிகை கடைக்காரர கல்யாணம் பண்ணி வைக்கிறார். அவரும் பார்வதிய நல்ல பாத்துகிறார்..

பார்வதி ஊருக்கு வந்த ஸ்ரீகாந்த பாக்க போகுது.. அங்க அந்த புது பொண்ணு ஸ்ரீகாந்த கொஞ்சம் கூட மதிக்கறதே இல்லைங்கரத தெரிஞ்சுக்குது..

கடைசீல தங்கராசு (வேற யாரு ஸ்ரீகாந்த்தான்) வாழ்க்கை இப்படி போய்டுச்சேனு பயங்கரமா அழுவுது.. வெளிய ஸ்ரீகாந்தோட அப்பா பார்வதிய பாத்து அழறார்..

கேமரா, படம் முழுக்க பார்வதியவே சுத்தி சுத்தி வருது.. அதுவும் ஸ்ரீகாந்த வெறித்தனமா காதலிக்கறது சிலருக்கு யதார்த்தமா இருக்கலாம்.. எனக்கு கொஞ்சம் எரிச்சலாதான் இருந்திச்சு.. (யாருப்பா அது "வயித்தெரிச்சலா"-ன்னு கேக்குறது? என் மாமா பொண்ணு பார்வதியவிட அழகா இருப்பா..)

ஸ்ரீகாந்த் மொத்த படத்துல 15 நிமிசம் கூட வரல.. ஓரமா வந்துட்டு போய்டுறார்.. பாவம் நடிக்க சந்தர்ப்பமே இல்ல.. பார்வதி நடிப்பு சூப்பர்.. "ஆவாரம் பூ" பாடல் நல்லா இருக்கு.. பருத்தி வீரன் படத்தோட சாயல் நிறைய இடத்தில் தெரியுது...

எனக்கு பிடிச்ச சீன் : வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் ஸ்ரீகாந்த பாக்குறதுக்கு பார்வதி காத்திருக்கு.. அப்போ அதோட தோழி "இன்னுமா நீ தங்கராச மறக்கலன்னு?" கேக்குறதுக்கு "எதுக்கு மறக்கணும்?"ன்னு கேக்குறது மறக்க முடியாத காட்சி..

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பணக்காரங்க எல்லாம் மத்தவங்கள மதிக்க மாட்டாங்க.. ஏழைங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டு இருப்பாங்கன்னு தெரியலைங்க..

இந்த படத்துல என்ன மெசேஜ் சொல்ல வர்றாங்கன்னு புரியவே இல்ல.. (புரிஞ்சு மட்டும் என்ன பண்ண போறோம்?) அத்தை பொண்ண கல்யாணம் பண்ண கூடாதா? பணக்கார வீட்டு பொண்ண கல்யாணம் பண்ண கூடாதா?
எனக்கு புரிஞ்சது, "அப்பா சொல்றாங்கன்னு, வசதியான பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டா.. வசதி வரும்.. ஆனா வாழ்க்கை போய்டும்"..

மொத்தத்தில் "பூ" - கிராமத்து பூ - சிலருக்கு பிடிக்கும்..

அடுத்த பதிப்பில் சந்திப்போம்..