
வழக்கம் போல தாராபுரம் சத்யா தியேட்டர்.. படம் : பையா.. அளவான கூட்டம்..
YSR பாட்டு எல்லாம் நல்லா இருந்துச்சு.. படமும் நல்லா இருக்கும்னு தான் நானும் டைரக்டர் தம்பியும் போனோம்.. இப்போல்லாம் தியேட்டர்ல ரீல் இல்ல.. எல்லாம் சாட்டிலைட் தானாம்.. என்னமோ போங்க.. மொக்கை படத்த எதுல பாத்தா என்ன?
டைட்டில் எல்லாம் சூப்பர்-ஆ இருந்துச்சு.. transporter காப்பி.. 4 சாப்ட்வேர் இஞ்சினியர்.. ஒரு பொண்ணு.. பெங்களூர்-ல டிராம் பஸ்ல போறாங்களாம்.. (நானும் 4 வருஷமா பெங்களூர்-ல இருக்கேன்.. அப்படி ஒரு பஸ் கூட பாத்தது இல்ல..) சரி விடுங்க.. போனா போகுது.. அந்த பொண்ணு "அவன் நிக்குற பஸ்ல ஏற மாட்டானாம்.".. "அவன்"? வேற யாரு.. நம்ம ஹீரோ கார்த்திக் தான்.. ஓடி வந்து பஸ்-ல ஏறுறாரு.. தமன்னா அதே பஸ்ல இருந்து இறங்குறாங்க.. பாத்ததும் அழகுல மயங்கிடுறாரு.. (கடவுளே)
கார்த்திக்கும் பிரண்ட்சும் டிரஸ் வாங்க போறாங்க.. அங்க லிப்ட்-ல தமன்னா... அடுத்த நாலா இன்டர்வியுக்கு போறாரு.. அங்க மறுபடியும் தமன்னா.. (டேய்!!) வேற என்ன இன்டர்வியு காலி.. வழக்கம் போல ஒரு பாட்டு.. (உஷ் ஓவரா கண்ண கட்டுதே)
கார்த்திக் பிரண்ட் டாக்ஸி ஏஜன்சி நடத்துறவர கூட்டிட்டு வர ரயில்வே ஸ்டேஷன் போறார் கார்த்திக்.. அங்க தமன்னா சென்னை போகுற டிரெயின் டிக்கெட்ட தொலைச்சுட்டு வில்லன்-கூட சுத்துறாங்க.. கார்த்திக்-கிட்ட வந்து சென்னை போக கூப்பிடுறாங்க.. கார்த்திக் வேண்டாம்னா சொல்லுவாரு.. கிளம்புறாங்க.. பாதில வில்லன்-ந விட்டுட்டு தமண்ணா கிளம்ப சொல்ல கார்த்திக் சந்தோசமா கிளம்புறாரு.. தமன்னா மும்பை கூட்டிட்டு போக சொல்லறாங்க.. வழி-ல யாருக்கோ ரிப்பேர் ஆன வண்டிய சரி பண்ணி தர்றாரு.. குழந்தைகளுக்கு ஐஸ் வாங்கி தர்றாரு.. (அட ஆமாங்க..) தமண்ணா உடனே அவங்க கதைய சொல்றாங்க..
அதாவது தமண்ணா அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு தமன்னாவ வில்லனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ண தமன்னா அதுல இருந்து தப்பிச்சு மும்பை-ல பாட்டி வீட்டுக்கு போறாங்க.. வழில தமன்னா அப்பா ஆளுங்க குறுக்க வர கார்த்திக் அடி பின்றாரு.. (அதிகமில்ல ஜென்டில்மென். ஜஸ்ட் 25 பேருதான்!!)
கார்ல போகும்போது மழை வருது.. வேற வழி இல்லாம இன்னொரு பாட்டு.. (சூப்பர் ஏரியா, சூப்பர் கேமரா.)
இதுல இன்னொரு க்ரூப் வேற.. கார்த்திக்கோட பிளாஷ் பேக்.. (மும்பைல வில்லன அடிச்சுட்டு பெங்களூர் வந்துறாரு..) மறுபடி சண்டை.. (ஆவ்வ்) 25 பேரையும் கார்த்திக் மிச்சம் வைய்க்காம அடிக்கறாரு..(சபாஷ்)
நைட்டு ஆயுடுது.. தமன்னாவ தேடி வந்த வில்லனுங்க தொரத்துறாங்க.. காட்டுக்குள்ள 10 அடி தூரத்துல வில்லனோட ஆளுங்க தேடி பாத்துட்டு திரும்பி போய்டுறாங்க..(உலக அதிசயம்).. கார்த்திக் பாட்டு பாடுறாரு.. (அந்த மாதிரி செட்டு உலகத்துல எங்கயும் பாக்க முடியாது..)
கடைசீல மும்பை போய் சேர்ந்துறாங்க.. அங்க தமன்னா பாட்டி வீட்டுல தமன்னா திட்டி அனுப்பிர்றாங்க.. இதுக்குள்ள கார்த்திக் ரொம்ப பீல் பண்ணி ஊருக்கு கிளம்புறாரு.. போற வழில தமன்னா நிக்கறாங்க.. கதைய சொல்றாங்க..
கிளைமாக்ஸ்ல ரெண்டு வில்லன் குரூப்பும் சேர்ந்துக்கறாங்க.. மிலிந்த் சோமன் இரும்பு கம்பில அடி பின்னிடுராறு.. அதுக்கு அப்புறம் கார்த்திக் எல்லாரையும் அடிச்சு தள்றாரு. (காதுல பூ வாசம் ஓவரா மனக்குதுங்க.. கொஞ்சமாவது லாஜிக் வேணாம்).
"இனிமே யாராவது குறுக்க வந்தீங்கன்னா தொலைச்சுருவன்"-னு ஒரு உலக மகா டயலாக்க சொல்லிட்டு கிளம்புறாரு.. வழில பெங்களூர் நண்பர் குரூப் அவர தேடி மும்பை வர்றாங்க.. அவங்க கார்த்திக் அடிச்ச லூட்டி பத்தி சொல்ல தமன்னா கார்த்திக் லவ் பண்றத தெரிஞ்சுக்கறாங்க.. (அப்புறம்.. அப்புறம்.. அட போங்க.. நான் வீட்டுக்கு போக வேணாம்?)
லிங்கு சாமியோட தீபாவளி படத்துக்கும் இதுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்ல..
எனக்கு பிடிச்சது டைட்டில்-உம், பாடல்களும் (ஒன்லி ஆடியோ)..
மொத்தத்தில் : பையா - கார்த்திக் காலி..
Movie Review