பாஸ் என்கிற பாஸ்கரன் (Boss (a) Baskaran)
பாட்டு எல்லாம் நல்லா இருந்துச்சு, படமும் நல்லா இருக்கும்னு பார்த்த படம்.
காமெடி மட்டும் போதும்னு இயக்குனர் ராஜேஷ் படம் எடுத்து இருக்கார். சரவணன், ஆர்யா அண்ணன் தம்பி.. சரவணன் கால்நடை மருத்துவர். ஆர்யா அரும்பாடு பட்டு பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கறவர்.. அரியர் எக்ஸாம் எழுத போகும்போது நயனதாராவ பாத்து சரண்டர் ஆகுறாரு ஆர்யா.
நயந்தாராவோட அக்காவுக்கும் சரவணனுக்கும் கல்யாணம் ஆக ஆர்யா குஷியா நயந்தாராவோட டூயட் பாடுறாரு. அண்ணிகிட்ட நயனதாராவ விரும்புறத சொல்ல அவங்க வேளைக்கு போக சொல்றாங்க. நயன்தாராவோட அப்பா வழக்கம்போல பிரச்சனை பண்றாரு. ஆர்யா, சந்தானனத்தோட சேர்ந்து டுடோரியல் காலேஜ் ஆரம்பிக்கிறாரு.
பல பிரச்சனைகளுக்கு அப்புறம் காலேஜ் நல்லா நடக்குது. ஆர்யாவோட அண்ணி அவங்க அப்பாகிட்ட நயனதாராவ பொண்ணு கேக்க அவரு மறுபடியும் பிரச்சனை பண்ண அப்புறம் சந்தானம்தான் காரணம்னு தெரிஞ்சு ஆர்யா விரட்ட நடுவுல ஜீவா மாப்பிளையா வர (கொஞ்சம் இருங்க.. மூச்சு வாங்குது.. சோடா ப்ளீஸ்..)
கடைசீல ஆர்யாவும் நயன்தாராவும் கல்யாணம் பண்ணிக்கறாங்க..
லாஜிக் இல்லாம பாத்தா நல்லா படம்.. ஜாலியா நேரம் போகும்..
பாடல்கள், காமெடி சூப்பர். அதுலயும் "நான் கடவுள்" படத்துல வில்லனா வர்றவர் பண்ற காமெடி.
"யாரிந்த பெண்தான்" பாடல் திரும்ப திரும்ப கேக்கலாம்..
பெரிய மைனஸ் - படம் "சிவா மனசுல சக்தி" பாகம் - 2.

Movie Review
5 comments:
சாதனம் காமெடி சூப்பர்
thanks for sharing tamil cinema news with us...
I'm a great fan of tamil cinema and your blog is worth the content
Nice Preview :)
nice tamil cinema news and thanks..:)
Post a Comment